ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஒ.) வானில் 25 கி.மீ. தூரம் வரையிலான இலக்குகளை அழிப்பதற்காக ஆகாஷ் ஏவுகணை என்ற அமைப்பை வடிவமைத்துள்ளது. இதுதொடர்பான சோதானை நேற்று நடைபெற்றது.
அப்போது, வானில் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டு இருந்த 4 ஆளில்லா விமானங்களை இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இது ஒரே ஏவுதல் அலகில் இருந்து செலுத்தப்பட்டது என்பது சிறப்பாகும்.
இதன் மூலம் ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த ஏவுகணை அமைப்பை கொண்டிருக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.