பாகிஸ்தான் நாட்டுக்குள் சீனாவின் ஊடுருவலை தடுத்து நிறுத்துமாறும், இந்தியாவுடன் அமைதியையும், வணிகத்தையும் மேம்படுத்துமாறும் பாகிஸ்தான் இராணுவ தலைமைத் தளபதி சயத் அசீம் முனிரிடம், அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
சீனாவின் பாதுகாப்பு முகாம் பாகிஸ்தானுக்குள் அமைக்கப்பட்டிருப்பதாக முக்கிய உளவுத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் தங்கள் நாட்டு இராணுவ முகாமையும், குவாடர் சர்வதேச விமான நிலையத்தை தங்கள் நாட்டு போர் விமானங்கள் பயன்படுத்திக் கொள்ளவும் பாகிஸ்தானிடம் சீனா அனுமதி கோரி இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
இதனிடையே, அமெரிக்க தூதர் டொனால்ட் ப்ளோம், கடந்த செப்டம்பர் மாதம் மிகவும் ரகசியமாக பலுசிஸ்தான் சென்று, சீனாவின் நிதியில் அமைக்கப்பட்டு வரும் குவாடர் துறைமுகத்தை பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் பிறகு பாகிஸ்தானில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் அமெரிக்க கண்காணித்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. ஆகவே, உலக வங்கியிடம் கடன் கேட்டு கையேந்தி நிற்கிறது பாகிஸ்தான். இந்த நிலையில், பொருளாதாக உதவி கேட்டு பாகிஸ்தான் இராணுவ தலைமைத் தளபதி சயத் அசீம் முனிர் வாஷிங்டன் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
அப்போதுதான், பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கும் பாகிஸ்தானுக்கு தேவைப்படும் பொருளாதார உதவியைச் செய்ய வேண்டுமானால், நாங்கள் வைக்கும் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் ஏற்க வேண்டும் என்று அமெரிக்கா கண்டிப்புடன் கூறயிருக்கிறது.
இதற்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்த நிலையில், பாகிஸ்தானுக்குள் சீனாவின் ஊடுருவுவதைத் தடுக்கவும், இந்தியாவுடன் வணிகம் மற்றும் அமைதியை மேம்படுத்தவும் வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகக் கூறப்படுகிறது.