திமுக மக்கள் நலனுக்கான பணிகளைச் செய்வதில்லை! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Aug 19, 2025, 07:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக மக்கள் நலனுக்கான பணிகளைச் செய்வதில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Dec 19, 2023, 11:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழை வளர்த்தோம் என்று சொல்லும் திமுக, திருக்குறள் நூலை உலகம் அறிய செய்ய என்ன செய்தது? எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழலுக்கு அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை விக்கிரவாண்டி தொகுதியில், நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, விழுப்புரம் மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இதுவரை 4,777 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும், 76,904 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 2,67,008 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,48,964 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,30,371 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,88,474 பேருக்கு, 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிரதமரின் மருத்துவ காப்பீடு, 5,28,599 விவசாயிகளுக்கு, வருடம் 6000 ரூபாய் நிதி, 5104 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என, தமிழகத்திலேயே மத்திய அரசின் திட்டங்கள் மூலம் அதிகம் பயனடையும் மாவட்டங்களில் விழுப்புரமும் ஒன்று.

மேலும், மத்திய அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக மக்களைச் சென்றடைய, மோடி கேரன்டி வாகனங்கள் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும் வந்து, மக்களைச் சந்தித்து, அந்த நலத்திட்டங்களில் மக்களை இணைத்துக் கொள்ளும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு, மக்கள் நலத் திட்டங்களில் சாதனை செய்தால், தமிழக அரசு, பண்டிகை தினங்களில் டாஸ்மாக் விற்பனையில் மட்டுமே சாதனை செய்கிறது.

நமது மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி, நேற்று நடந்த இரண்டாம் ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், காசி மற்றும் கன்னியாகுமரி நகரை இணைக்கும் காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

தமிழின் பெருமையான திருக்குறளை, அசாமீஸ், அவாதி, போஜ்புரி, போடோ, டோக்ரி, காஷ்மீரி, கொடவா, கொரகா, மைதிலி, துளு ஆகிய 10 இந்திய மொழிகளிலும் பர்மீஸ், கிரியோல், மலாய், ஜாப்பனீஸ், டேனிஷ் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் பயன் பெற பிரெய்லி மொழியிலும் திருக்குறள் நூலை வெளியிட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் திருக்குறளை 29 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளார் நமது பாரத பிரதமர். இது மட்டுமா, பார்வை குறைபாடுள்ள மாற்று திறனாளிகள் பயன்பெற தொல்காப்பியம், புறநானூறு, மணிமேகலை உட்பட 45 தமிழ் இலக்கண, இலக்கிய, சங்க இலக்கிய நூல்களை பிரெய்லி மொழியில் நேற்று வெளியிட்டுள்ளார் நமது பிரதமர்.

தமிழை வளர்த்தோம் என்று சொல்லும் திமுக, திருக்குறள் நூலை உலகம் அறிய செய்ய என்ன செய்தது? நமது பிரதமர் நேற்று, காசி தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் பேசும்போது, தமது உரையின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பை, செயற்கை நுண்ணறிவு முறையில் ஒலிக்கச் செய்தார். வெகுவிரைவில் தமிழ் மக்கள், பாரத பிரதமர் மோடி அவர்கள் பேசும் அனைத்து உரைகளையும் தமிழில் கேட்கலாம். திமுக இனி பொய்களைப் பரப்பி அரசியல் செய்யமுடியாது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்களும், சாராயம் காய்ச்சும் துறைக்கும், செம்மண் கடத்தும் துறைக்கும் தான் அமைச்சர்களாக இருக்கிறார்களே தவிர, மக்கள் நலனுக்கான பணிகளைச் செய்வதில்லை. இரண்டு அமைச்சர்கள் இருந்தும் விழுப்புரம் மாவட்டத்திற்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.

அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான இடங்களில் நடந்த அமலாக்கத் துறை சோதனையில், பல கோடி முறைகேடாகச் சேர்த்த பல கோடி பணத்துக்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. இவை மக்கள் பணம்.

வெளிநாட்டில் நிறுவனங்களை வாங்கியதில், அமைச்சர் பொன்முடி, ஹவாலா மூலம் பெருமளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இது தான் தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சரின் லட்சணம்.

தமிழகத்தில் ஒரே ஒரு டாஸ்மாக் கடை இருக்கும் வரை, மக்கள் விரோத திமுகவுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. தமிழகத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களைத் தந்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கரங்களை வலுப்படுத்த, நமது குழந்தைகள் எதிர்காலத்துக்காக, வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaiannamalai en mann en makkal rally
ShareTweetSendShare
Previous Post

நிரம்பும் வைகை அணை : 3 – வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

Next Post

பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம்!

Related News

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

கூட்டத்திற்குள் நோயாளி இல்லாமல் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – திட்டமிட்டு திமுக இடையூறு செய்வதாக இபிஎஸ் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies