சேலம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பாஜகவில் இணைந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம், சேலம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், ஐம்பதாண்டு காலமாக தமிழக அரசியல் தளத்தில் செயல்பட்டு வருபவருமான, திரு. வெங்கடாசலம் அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மீது கொண்டுள்ள ஈர்ப்பால், @BJP4Tamilnadu மாநிலத் துணைத் தலைவர்கள் திரு… pic.twitter.com/sygThjFJLI
— K.Annamalai (@annamalai_k) December 19, 2023
இன்றைய தினம், சேலம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், ஐம்பதாண்டு காலமாக தமிழக அரசியல் தளத்தில் செயல்பட்டு வருபவருமான, வெங்கடாசலம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது கொண்டுள்ள ஈர்ப்பால், தமிழக பாஜக
மாநிலத் துணைத் தலைவர்கள் K.P. இராமலிங்கம் MP
மற்றும் கரு. நாகராஜன் ஆகியோர் முன்னிலையில், தமது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்துள்ளார்.
வெங்கடாசலம் மற்றும் அவருடன் பாஜகவில் இணைந்துள்ள அனைவரையும் மனதார வரவேற்று மகிழ்வதோடு, தூயதோர் அரசியலை முன்னெடுக்கும் தமிழக பாஜக செயல்பாடுகளில், அவர்கள் ஆழ்ந்த அரசியல் அனுபவத்தையும், பங்களிப்பையும் கோருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.