திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஒருவர் தன்னைப்போல் மிமிக்ரி செய்த செயலை ராகுல் காந்தி செல்போனில் படம்பிடித்ததற்கு துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வாயில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி, கல்யாண் பானர்ஜி துணை ஜனாதிபதியை போல் மிமிக்ரி செய்து அவரை கேலி செய்து கொண்டிருந்தார். இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது செல்போனில் படம் படித்தார்.
இந்நிலையில், அவை 12 மணிக்கு மீண்டும் கூடிய போது, மாநிலங்களவை தலைவர் தன்கர் தனது அதிருப்தியை தெரிவித்தார். மக்களவை தலைவர் வேறு, மாநிலங்களவை தலைவர் வேறு, அரசியல் கட்சிகளுக்கு வேறுபாடுகள் இருக்கும், கருத்துப் பரிமாற்றங்கள் இருக்கும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி கல்யாண் பானர்ஜி என்னை மாதிரி மிமிக்ரி செய்கிறார்.
அதனை ஒரு மூத்த தலைவரான ராகுல் காந்தி செல்போனில் படம் பிடிக்கிறார். இது அபத்தமானது, அநாகரீகமானது என்றும், இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார். இதனிடையே திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மற்றும் ராகுல் காந்தியின் செயலுக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றர்.