கோவையில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற விழிப்பணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பாரத பிரதமர் மோடியின் மக்கள் நல திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் ‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ யாத்திரை நிகழ்ச்சி கோயம்புத்தூர் மாவட்டம், தீத்திப்பாளையம் ஊராட்சியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு, செல்வமகள் சேமிப்பு திட்டம், பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு, ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் மக்களுக்கு இலவச காப்பீடு, முத்ரா கடன் உதவி திட்டத்தில் தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கப்பட்டது.