பெரம்பலூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஒரு குவாரிக்கு தலா ரூ.2 கோடி என 31 கல் குவாரிகளுக்கான ஏலம் தொடர்பாக மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் டெண்டர் பெட்டி வைக்கப்பட்டது. ஆனால், செங்குணம், திருவளக்குறிச்சி உள்ளிட்ட 21 குவாரிகளை, திமுக எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் ஆகியோர், அதிகாரிகள் துணையோடு அதனை பிளாக் செய்து இருந்தனர்.
இதனால், குவாரியை ஏலம் எடுக்க விரும்புபவர்களிடம், கட்சி நிதியாக 25 முதல் 50 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர். இது தவிர, அரசுக்குக்கு கட்ட வேண்டிய ஒப்பந்தப்புள்ளி தொகையை, டி.டி-யாக எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதித்துள்ளனர்.
இந்த நிலையில், பாஜக கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், அவரது தம்பி முருகேசன் உள்ளிட்டோர் கல்குவாரி ஏலம் எடுக்க பெட்டியில் விண்ணப்பம் போட சென்றனர்.
இதனால், ஆத்திரமடைந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரன் உதவியாளர் மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனின் பி.ஏ. சிவசங்கர் உள்ளிட்டோர் விண்ணப்பத்தைப் பறித்துக் கிழித்தெறிந்ததோடு, கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அலுவலத்தில் உள்ள பொருட்களை சூறையாடினர். இதில், தப்பியோடிய பாஜக நிர்வாகி முருகேசனின் பேண்டை உருவிவிட்டு, போலீசார் முன்னிலையில் தாக்கினர்.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதிகாரிகள், பெண் அலுவலர்கள் கதவைச் சாத்திக் கொண்டனர். இதனால், கலெக்டர் அலுவலகமே போர்க்களமாக காட்சியளித்தது.
திமுகவினரின் இந்த கொலை தாக்குதலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும், பாதிக்கப்பட்டவரின் சார்பில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், போலீசார், குற்றம் செய்தவர்களை விட்டுவிட்டு சாதாரண நபர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், புதுடெல்லியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹெல்டரை சந்தித்து பெரம்பலூர் கல்குவாரி ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாகவும், இதுவரையில் வன்முறையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யாத மாவட்ட காவல்துறையினரின் அலட்சியப் போக்கை கண்டித்தும் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இதனால், அமைச்சர் சிவசங்கர் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் அவரது உதவியாளர் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.