கொரோனா குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பீதி அடைய தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் இது குறித்து பேசிய மன்சுக் மாண்டவியா,
கொரோனா குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பீதியடைய தேவையில்லை. மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும். கண்காணிப்பை தீவிரப்படுத்தி அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பில் மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளும் மத்திய அரசு வழங்கும்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து மருத்துவமனைகளிலும் ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார், மேலும் பண்டிகைகளுக்கு முன்னதாக குளிர்காலத்தில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மாநிலங்களை வலியுறுத்தினார்.