தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால், 3 நாட்களுக்குப் பிறகு ஐந்தருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக, குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய அருவி மற்றும் ஐந்தருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தென்காசி மாவட்டத்தில் தற்போது மழை ஓய்ந்துள்ளது. இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய அருவிகளில் நீர்வரத்து சற்று குறைய தொடங்கி உள்ளது.
இன்று காலை ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் சற்று கூடுதலாக உள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.