குவைத் மன்னராக பதவியேற்றுள்ள ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-சபாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குவைத் மன்னராக இருந்து ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா, உடல்நலக்குறைவால் கடந்த 16 ஆம் தேதி காலமானார். இதனையடுத்து குவைத் புதிய மன்னராக அவரது சகோதர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-சபா பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், புதிய மன்னராக பதவியேற்றுள்ள ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், குவைத் மன்னராக பொறுப்பேற்றுள்ள ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவிற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வரும் ஆண்டுகளில் இருநாடுகளின் உறவுகள் மேலும் வலுப்பெறும் என்றும், குவைத்தில் உள்ள இந்திய சமூகம் தொடர்ந்து செழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.