ஒருநாள் மற்றும் டி20 புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது.
அதில், ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடம் வகித்த சுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளி, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 2, 3, 4-ஆம் இடங்களில் இந்தியாவின் சுப்மன் கில், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளனர்.
ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில், பாகிஸ்தானின் பாபர் அசாம் முதல் இடத்திலும், இந்தியாவின் சுப்மன் கில் இரண்டாவது இடத்திலும், விராட் கோலி மூன்றாவது இடத்திலும், ரோகித் சர்மா நான்காவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஐந்தாவது இடத்திலும், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் ஆறாவது இடத்திலும், அயர்லாந்தின் ஹாரி டெக்டர் ஏழாவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் ராஸ்ஸி வான் டெர் எட்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் மலான் ஒன்பதாவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் ன்ரிச் கிளாசென் பத்தாவது இடத்திலும் உள்ளனர்.
கேன் வில்லியம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் முறையே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் நம்பர் 1 பேட்டராக நீடிக்கிறார்கள். ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் கேசவ் மகராஜ் முதலிடத்திலும் ஜோஷ் ஹேசில்வுட் 2-ஆம் இடத்திலும் உள்ளனர்.
ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஷகிப் அல் ஹசன் முதல் இடத்தில் உள்ளார். டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் அடில் ரஷீத் முதல் இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் தரவரிசை பந்துவீச்சாளர் பட்டியலில் ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இடத்திலும், ஆல்ரவுன்டர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதல் இடத்தில் உள்ளார்.