2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் முடிவடைந்துள்ள நிலையில் ரசிகர் ஒருவர் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியிடம் பெங்களூரு அணி குறித்து கேள்வி கேட்டதற்கு அவர் அளித்த பதில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்திய பிரீமியர் லீக் தொடர் தொடங்கி 16 ஆண்டுகள் ஆகிறது, இந்த 16 ஆண்டுகளும் போட்டியில் விளையாடி இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லாத அணி என்றால் பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் அணிகள் என்றே சொல்லலாம்.
இதில் அனைவரிடமும் கவனம் பெற்ற அணி என்றால், அது பெங்களூர் அணி ஏனெனில் பெங்களூரு அணியில் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி விளையாடுகிறார். அதுமட்டும் மின்று கிறிஸ் கெயில் இந்த அணியில் முன்னாள் வீரராக விளையாடி வந்தார்.
ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக ரன்களை குவித்த அணியாகவும் இதுவரை குறைந்த ரன்களை எடுத்த அணியாகவும் திகழ்வது பெங்களூரு அணி தான்.
ஒரு தொடர் முழுக்க சிறப்பாக விளையாடி இறுதியில் வெற்றி வாய்ப்பை தவறவிடும் அணி தான் பெங்களூரு. எவ்வளவு முயற்சி செய்து இந்த 16 வருடங்களில் பெங்களூரு அணியால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை என்பதே உண்மை.
இந்நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் முடிவடைந்துள்ளது. இந்த சமயத்தில் ரசிகர்கள் ஒருவர் தோனியிடம் கேட்ட கேள்வி இணையத்தில் வரைலாகி வருகிறது.
அதில் ரசிகர், ” நான் ஆர்சிபி அணியின் தீவிர ரசிகர், நீங்கள் ஐந்து கோப்பையை சிஎஸ்கே அணிக்காக வென்று கொடுத்து விட்டீர்கள், ஆனால் எங்களால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. ஏன் நீங்கள் ஆர்சிபி அணிக்கு வந்து கோப்பையை வெல்வதற்கு உதவி செய்யக்கூடாது” என்று கேள்வி கேட்டார்.
அதற்கு தோனி, ” ஆர்சிபி என்பது மிகவும் நல்ல அணி. ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தவரை உங்களுடைய திட்டப்படி எப்போதுமே சரியாக நடைபெறாது. ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால் அனைத்து 10 அணிகளுமே பலம் வாய்ந்த வீரர்களை தான் தேர்வு செய்கிறார்கள். பிரச்சனையே சில வீரர்கள் சில போட்டிகளில் காயம் அடைந்து விளையாட முடியாத சூழல் ஏற்படுகிறது. இதன் மூலம் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது.
நான் ஏற்கெனவே சொன்னது போல ஆர்சிபி நல்ல அணி தான். ஆனால் எங்கள் அணியிலுமே தற்போது பிரச்சனை இருக்கிறது. நான் என் அணி குறித்து கவலைப்படவே நேரம் சரியாக இருக்கிறது. இதில் நான் எப்படி மற்ற அணிக்கு வந்து உதவ முடியும். நான் ஆர்சிபிக்கு வந்து உதவினேன் என்றால் எங்கள் அணி ரசிகர்கள் எவ்வாறு நினைப்பார்கள். அவர்களுடைய மனது வருத்தப்படும் அல்லவா?
அவர்கள் இடத்தில் நீங்கள் இருந்தாலும் எப்படி உணர்வீர்கள். எனவே அது முடியாத காரியம். ஐபிஎல் தொடரில் விளையாட போகும் 10 அணிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை மட்டும் நான் கூறிக் கொள்கிறேன் என்று தோனி பதில் அளித்தார்.
தோனியின் இந்த பதிலைக் கேட்டு சிஎஸ்கே ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள். இந்த பதில் மூலம் தோனி சிஎஸ்கேவில் தான் எதிர்காலத்தில் தொடரப் போகிறார் என்பது தெளிவாக தெரிகிறது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.