காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மன்மோகன்சிங், மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த விழவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மன்மோகன்சிங், மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் எச்.டி.தேவகவுடா ஆகியோருக்கும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிவால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி, உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு அழைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.