அமெரிக்காவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண் குறித்து தகவல் தருபவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் சன்மானம் அளிப்பதாக அந்நாட்டில் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. அறிவித்திருக்கிறது.
இந்தியாவைச் சேர்ந்த 29 வயதான மயூசி பகத் என்கிற மாணவி, கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு மாணவ விசாவில் சென்றார். ஜெர்ஸி நகரத்தில் தங்கி நியூயார்க் தொழில்நுட்பக் கழகத்தில் கல்வி பயின்று வந்தார். இவர், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் தேதி மாலையில், தான் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து வெளியேறினார்.
இதன் பிறகு அவர் மீண்டும் அறைக்குத் திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் 2019 மே 1-ம் தேதி காவல்துறையில் புகார் அளித்தனர். கடந்த 7 ஆண்டுகளாக மாணவியைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அமெரிக்க உளவு அமைப்பின் நெவார்க் அலுவலகம் மற்றும் ஜெர்ஸி நகர காவல்துறை தற்போது பொதுமக்களின் உதவியை நாடியிருக்கிறது.
மாணவி எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பது குறித்து தகவல்கள் அளிப்பவருக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் வரை சன்மானம் அளிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது. மேலும், மயூசி பகத் காணாமல் போன இரவு, கருப்பு நிற டீ சர்ட்டும் வண்ணமயமான பைஜாமாவும் அணிந்திருந்ததாகவும், அவருக்கு ஆங்கிலம், ஹிந்தி, உருது மொழிகள் தெரியுமெனவும் தெற்கு பிளைன்பீல்ட் பகுதியில் அவரின் நண்பர்கள் வசித்ததாகவும் போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.