வடமேற்கு சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் கிங்காய் மாகாணத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது. இது கான்சூ மாகாணத்தின் ஜிஷிஷான் கவுன்ட்டியில் உணரப்பட்டது. மேலும், கிங்காய் மாகாணமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதனால், இரு மாகாணங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டன. ஆயிரக்கணக்கான வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளுக்கு செல்லாமல் வீதிகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளதாகவும், 980 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் பேரிடர் மீட்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இரு மாகாணங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு உதவி செய்ய தைவான் முன்வந்துள்ளது.