இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது.
இந்திய அணியின் வீரர்கள் :
கே.எல்.ராகுல் ( கேப்டன்), திலக் வர்மா, அக்சர் படேல், சாய் சுதர்சன், ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், ராஜத் பதிதார், வாஷிங்டன் சுந்தர்.
தென் ஆப்பிரிக்கா அணியின் வீரர்கள் :
ஐடன் மார்க்ராம் (கேப்டன்), ரீசா ஹென்றிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்றிச் கிளாசென், டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுக்வாயோ, தப்ரைஸ் ஷம்சி, நான்ட்ரே பர்கர், கேசவ் மஹாராஜ், டோனி டி ஜோர்ஜி, வியான்.