வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட கடந்த 19-ம் தேதி பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். ஆனால், அன்றைய தினம், இந்தியா கூட்டணி அழைப்பின் பேரில் டெல்லி கூட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர், சென்னை திரும்பினார்.
அமைச்சர் பதவியை இழந்துவிட்ட பொன்முடி, முதல்வர் ஸ்டாலினை 20-ம் தேதி சென்னையில் சந்திக்க முடிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்டாலினிடம் பேசிய பொன்முடி, கீழ் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டதால், அதையே சென்னை உயர்நீதிமன்றமும் சொல்லும் என நினைத்தேன். ஆனால் இப்படி ஆகிவிட்டதே என பொன்முடி கண்கலங்கியுள்ளார்.
அதற்கு ஸ்டாலின், ‘நானும் அப்படித்தான் நினைத்தேன். வக்கீல்களிடம் பேசியுள்ளேன். உச்ச நீதிமன்றத்தில் நல்லது நடக்கும். கவலைப்படாதீங்க என பொன்முடிக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.
இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்முடிக்கு இன்று தண்டனை அறிவித்த அதே நேரத்தில் ஸ்டாலின் தூத்துக்குடியில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட சென்றுவிட்டார்.