கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ இலச்சினை மற்றும் சின்னத்தை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் இன்று வெளியிடுகிறார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளுக்கான தொடக்க நிகழ்வில் அனுராக் சிங் தாக்கூர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அதிகாரபூர்வ இலச்சினை, உடை, சின்னம், சுடர், கருப்பொருள் பாடல் ஆகியவற்றை வெளியிடுகிறார்.
கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டின் 6 -வது பதிப்பு 2024 ஜனவரி 19 முதல் 31 வரை நடைபெற உள்ளது.
சென்னையில் நடைபெறும் தொடக்க விழாவில், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் மாநில அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், டோக்கியோ ஒலிம்பிக் வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, பேட்மிண்டன் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, ஹாக்கி ஆசியக் கோப்பையில் வெண்கலப் பதக்கம் வென்ற எஸ்.மாரீஸ்வரன் உள்ளிட்ட புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.