அரசியல் கட்சியினர் பொது வெளியில் பேசும் போது மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது தலைமை தேர்தல் ஆணையம் அறவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எதிர்க்கட்சியினரை கேலி செய்வதற்காக பயன்படுத்தும் சில வார்த்தைகள், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் விதமாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வருகின்றன.
எனவே பொதுவெளி, விளம்பரம், சமூக ஊடகங்களில் மாற்றுத்திறனாளிகள் இழிவுப்படுத்தும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்.
மீறினால், மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பேச்சுக்கள், சமூகவலைதள பதிவுகள், விளம்பரங்கள் மற்றும் பத்திரிகை செய்திகளில் பயன்படுத்தப்படும் வார்த்தை பிரயோகங்களை அரசியல் கட்சிகள் உள் ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.