உத்தரமேரூரில் நெடுஞ்சாலைத்துறை டிசார்பில் 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தரமற்ற சாலைப் பணிகள் நடைபெற்று வருவதாக பகுதி மக்கள் குற்றச்சாட்டுவைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி களியாம்பூண்டியிலிருந்து, பெருநகர் ஊராட்சிக்கு செல்லும் சாலையில், சுமார் -7-கிலோ மீட்டர் வரையிலான தார் சாலை அமைக்கும் பணிகளுக்காக நெடுஞ்சாலைத் துறையினர் சார்பில், ரூபாய் -2.50- கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக, சாலை ஓரங்களில் உள்ள மேடு- பள்ளங்களை, சீரமைக்க, சவுட்டு மண் எனப்படும்
கிராவள்- மண்ணை பயன்படுத்தி சாலை ஓரங்களில் உள்ள மேடு- பள்ளங்களை “தரமான முறையில் சீரமைப்பது சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்” நடைமுறை வழக்கம்!!
ஆனால், உத்தரமேரூர் நெடுஞ்சாலை துறையினர், சாலையினை ஒட்டியுள்ள சாக்கடை கால்வாயில் உள்ள ‘சகதிகளை’- ஜேசிபி- இயந்திரம் மூலம் சாலையோரங்களில், நிரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத் துறை அலுவலரிடம் கேட்கையில், நெடுஞ்சாலை துறை அதிகாரி
தனக்கு ஏதும் தெரியாது எனவும், “கான்ட்ராக்- ஒப்பந்ததாரரிடம் கேட்குமாறு” மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.இப் பணிகள் குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்கையில், “நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் விசாரித்துக் கொள்ளுமாறு” கூறியுள்ளார்!!
அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாரதி நெடுஞ்சாலைத்துறை அலுவலக அதிகாரியான
உதவிப் பொறியாளர் சுஜிதாவிடம் கேட்டுள்ளார்.
அதற்கு, உதவி கோட்ட பொறியாளர் சுஜிதா சாலை பணிகளின் போது, சாக்கடை உள்ளிட்ட வடி கால்வாய்களில் உள்ள
“சகதி மண்ணை” பயன்படுத்துவதற்கு, நெடுஞ்சாலைத் துறை சட்ட விதிகளில் இடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஆர்வலர் பாரதி- கூறுகையில்,–
மக்கள் வரிப்பணத்தில் பல-கோடிகளில் செலவிடப்படும் தொகை” வீணடிக்கப்படுவதாகவும் திராவிட மாடல் ஆட்சியில், அரசுத்துறை அதிகாரிகள் கூண்டோடு உத்தரமேரூர் தொகுதிகளில் பல்வேறு, ஊழல்- உள்ளிட்ட லஞ்ச- லாவண்ய குளறுபடிகள் நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.