பாராகுவே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாராகுவே பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயம் அடைந்தனர். முதலில் தனது தந்தையை சுட்டுக்கொன்ற அந்த மாணவன் பின்னர் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அந்த மாணவனும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ப்ராக் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த செய்தி வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.