ஏடன் கடற்பகுதியில் ஏவுகணையை தாக்கி அழிக்கும் வல்லமை வாய்ந்த போர் கப்பலை இந்திய கடற்படை நிலைநிறுத்தியுள்ளது.
கடந்த 14 ஆம் தேதி இரவு, MV Ruen என்ற மால்டா நாட்டு கொடியுடன் சென்ற கப்பலில் 6எ பேர் கொண்ட கடற்கொள்ளையர்கள் கடத்தினர்.அந்த கப்பலில் ஊழியர்கள் உள்ளிட்ட 18 பேர் இருந்தனர்.
இதையடுத்து இந்திய கடற்படையை சேர்ந்த விமானம் அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா நாட்டுக்கு செல்வது தெரிய வந்தது.
உடனே இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ் கொல்கத்தா அந்த பகுதிக்கு சென்று கடத்தப்பட்ட கப்பலை இடைமறித்தது. இந்நிலையில், கடற்கொள்ளையர்களை தடுக்கும் நடவடிக்கையில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.
ஏடன் வளைகுடா பகுதியில் 2-வது போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.கொச்சி கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் நவீன வசதிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.