தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக பயிற்சி போட்டியில் விளையாடி வந்த விராட் கோலி திடீரென நாடு திரும்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. T20, 50, டெஸ்ட் கிரிக்கெட் ஆகிய மூன்று தொடரில் இந்திய அணி விளையாடிவருகிறது.
அதில் டி20 மற்றும் ஒரு நாள் தொடர் நிறைவடைந்த நிலையில் டிசம்பர் 26ஆம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது.
மற்ற இரண்டு தொடர்களிலும் இந்திய அணியின் இளம் வீரர்கள் விளையாடிய நிலையில் டெஸ்ட் தொடரில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் விளையாடவுள்ளனர்.
சமீபத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்ற வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வந்தது.
இந்நிலையில் தற்போது பயிற்சி போட்டியில் விளையாடி வந்த விராட் கோலி திடீரென இந்தியாவிற்கு திரும்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி வீரர்களுக்கு இடையிலான பயிற்சி போட்டியில் இருந்து விலகுவது குறித்து பிசிசிஐ மற்றும் பயிற்சியாளர்களுக்கும் விராட் கோலி முறையாக தகவல் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
விராட் கோலி திடீரென தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்புவதற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால் குடும்பத்தினரை சந்தித்துவிட்டு விராட் கோலி இன்று மாலை மீண்டும் தென்னாப்பிரிக்கா புறப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனால் போதுமான பயிற்சியில் ஈடுபட்ட பின், விராட் கோலி நிச்சயம் முதல் போட்டியில் களமிறங்குவார் என்று பார்க்கப்படுகிறது. இருப்பினும் விராட் கோலி அவசர அவசரமாக மும்பை திரும்பியது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.