போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால், 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், பல லட்சம் கோடி ரூபாய் செலவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இதை சகித்துக் கொள்ள முடியாத சிலர், நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், போலி ஆவணங்கள் கொடுத்து சிம் கார்டு அதை பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்தி வந்தனர்.
இது தொடர்பாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, போலி ஆணவங்கள் கொடுத்து சிம் கார்டு வாங்கும் நடைமுறைக்கு மத்திய அரசு செக் வைத்தது. இது தொடர்பாக, புதிய தொலைத்தொடர்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய தொலைத்தொடர்பு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தொலைபேசி எண்ணை பயன்படுத்தி, மோசடி செய்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேறொருவரின் ஆவணத்தைப் பயன்படுத்தி மோசடியாக சிம் கார்டு வாங்குவது தண்டனைக்குரிய குற்றம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, செல் போன் சிம் கார்டு வாங்கும்போது, நாம் கொடுக்கும் ஆவணங்கள் முறையானதா என செக் செய்து கொண்டு, கொடுக்கவேண்டும். அப்போதுதான், அது நமக்கு பாதுகாப்பாக இருக்கும்.