மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய வரி பகிர்வுத் தொகை ரூ.72,961.21 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளது.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ₹13 ஆயிரம் கோடி விடுவிப்பு. தமிழ்நாட்டுக்கு ₹2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிதி அமைச்சகம் தனது, எக்ஸ் பதிவில்,
வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்த ரூ .72,961.21 கோடி மதிப்புள்ள கூடுதல் தவணை வரிப் பகிர்வை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் தவணை 2024, ஜனவரி 10 அன்று மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய வரிப் பகிர்வு தவணையாகும். 2023, டிசம்பர் 11 அன்று ஏற்கனவே விடுவிக்கப்பட்ட ரூ .72,961.21 கோடியை விட இது கூடுதலாகும். தமிழ்நாட்டுக்கு ரூ. 2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
👉 In view of the forthcoming festivities and the New Year, Centre releases ₹72,961.21 crore as additional installment of Tax Devolution to States to strengthen State Governments for financing various social welfare measures and infrastructure development schemes
👉 This… pic.twitter.com/MssB1DJ4w5
— Ministry of Finance (@FinMinIndia) December 22, 2023
மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய வரி பகிர்வுத் தொகை ரூ.72,961.21 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளது. இதில், தமிழகத்துக்கு ரூ.2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரேதச மாநிலத்திற்கு ரூ.13,088 கோடி கோடி விடுவிக்கப்பட்டிருக்கிறது.