பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
புது டெல்லியில் இன்று பாஜகவின் இரண்டு நாள் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, பாஜக அலுவலகத்தில் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் திட்டங்கள் குறித்தும், கடந்த மாதம், நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு நாள் கூட்டத்திற்கு பாஜக தலைவர் ஜேபி நட்டா தலைமை தாங்குகிறார், மாநிலத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இண்டி கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் வீயுகத்தை முறியடிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தக் கூட்டத்தில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவை மதிப்பிட வாய்ப்புள்ளது.