ஐஸ்வர்யா ரஜிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் பொங்கல் போட்டியிலிருந்து விலகியுள்ளதற்கு தனுஷின் கேப்டன் மில்லர் படம் தான் காரணம் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
கிரிக்கெட்டையை மையமாக வைத்து, இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’.
இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகும் இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது பொங்கல் போட்டியில் இருந்து லால் சலாம் விளங்கியுள்ளது.
லால் சலாம் படத்துக்கு போட்டியாக மேலும் மூன்று திரைப்படங்கள் பொங்கல் ரேஸில் களமிறக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்று அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர்.
தனுஷ் படத்துடன் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்து தான், ரஜினிகாந்த் மற்றும் இப்படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா இருவரும் லால் சலாம் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
ஆனால் பொங்கலுக்கு லால் சலாம், கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், விஜய் சேதுபதி, காத்ரீனா கைஃப் நடித்துள்ள பான் இந்தியா படமான மெரி கிறிஸ்துமஸ் என பிரம்மாண்ட பட்ஜெடில் தயாராகியுள்ள நான்கு படங்கள் வெளியாகவுள்ளதால் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என தியேட்டர்காரர்களே குழம்பிப் போய் இருந்தனர்.
இந்த நிலையில், திரையரங்க உரிமையாளர்களின் நலனை கருத்தில் கொண்டும் வசூல் பாதிக்கும் என்பதை மனதில் வைத்தும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கு பதிலாக அப்படத்தை ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் செய்யும் முடிவில் இருக்கிறார். ஏற்கனவே அன்றைய தினம் வெளியாக இருந்த தங்கலான் படம் தள்ளிப்போனதால் லால் சலாம் அந்த தேதியை லாக் செய்துள்ளதாக கூறப்படுகிறது, விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.