மன்சூர் அலிகானுக்கு ரூ. 1 இலட்சம் அபராதம் – நீதிபதி அதிரடி உத்தரவு!
Sep 13, 2026, 11:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மன்சூர் அலிகானுக்கு ரூ. 1 இலட்சம் அபராதம் – நீதிபதி அதிரடி உத்தரவு!

Murugesan M by Murugesan M
Dec 22, 2023, 05:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கை ரூபாய் 1 இலட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு நடிகை திரிஷா, மகளிர் அமைப்புகள் மற்றும் தமிழ் திரையுலகினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதை அடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதன் பின் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி, நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து, நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க, நடிகை திரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் தனது சமூக வலைத்தள கணக்கில் பதிவிட்டிருந்தார்.

இந்த சூழ்நிலையில், முழு காணொளியையும் பார்க்காமல், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, நடிகை திரிஷா, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, எங்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்க வேண்டாம் என்றார். மேலும், மன்சூர் அலிகான் மனுவிற்கு பதிலளிக்கும் படி நடிகை திரிஷா உள்ளிட்ட மூவருக்கும் உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு என்று கூறினார். மேலும் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறி, நடிகர் மன்சூர் அலிகானுக்கு 1 இலட்ச ரூபாய் அபராதம் விதித்து வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Tags: chennai high courtmansoor ali khan
Share
Tweet
SendShare
Previous Post

பொங்கல் போட்டியிலிருந்து விலகும் ‘லால் சலாம்’ – காரணம் தனுஷ்?

Next Post

சொர்க்க வாசல் திறப்பு – தயார் நிலையில் 50 ஆயிரம் லட்டுகள்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies