நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பழையான புரதாண சிறப்பு மிக்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொன் வரதராஜப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாத வைகுண்ட ஏகாதசி நள் அன்று சொக்க வாசல் திறக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான சொக்க வாசல் திறப்பு விழா நாளை, அதாவது 23 -ம் தேதி அதிகாலை நடைபெறுகிறது. இந்த விழாவில் நாமக்கல், சேலம் மட்டுமல்லாது, சுற்றுவட்டார பகுதிகளைச் சோந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் சொர்க்கவாசல் விழாவில் கலந்து கொள்வது வழக்கம்.
இதையொட்டி, ராசிபுரத்தில், ஒரு தனியார் அமைப்பின் சாா்பில் பக்தா்களுக்கு 50 ஆயிரம் லட்டுகள், தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடலை மாவு, சா்க்கரை, நெய், கடலை எண்ணெய், முந்திரி, ஏலக்காய், திராட்சை ஆகியவற்றை கொண்டு 50 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சுமாா் 30 தொழிலாளா்கள் லட்டு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதனால், 50 ஆயிரம் லட்டுக்கள் தயார் நிலையில் உள்ளது.