டெல்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில், ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
டெல்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய பண மோசடி வழக்கில், கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங்கை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
அவர் ஜாமின் கோரி டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஜாமீன் மனு மீதான வாதங்களின் போது, சஞ்சய் சிங்கின் ஜாமின் மனுவை அமலாக்கத்துறை எதிர்த்தது. முறைகேடு தொடர்பான விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும், சஞ்சய் சிங்கை ஜாமினில் விடுவித்தால், அவர் விசாரணையைத் தடுக்கலாம். மேலும், சாட்சியங்களை அழிக்கலாம் என்று கூறியது.
இதை அடுத்து சஞ்சய் சிங்கின் ஜாமின் மனுவை நிராகரித்து நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டார்.