மத்திய அரசு வழங்கும் நிதியை கொண்டு தமிழகத்தில் செயல்படுத்திவரும் அனைத்து திட்டங்கள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தமது X பக்கம் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக ஆட்சிக்கு வரும்போது தமிழகத்திற்கு 29.4% மட்டுமே மத்திய அரசின் வரி பங்கீடு கிடைத்து வந்தன.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டுவரப்பட்ட 14 வது நிதி குழு மூலம் மாநிலங்களுக்கு 42% வரி பங்கீடு வழங்கப்பட்டன அது மட்டுமில்லாமல் மானியங்கள் மீதான பங்கீடு மாநிலங்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.
திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் மாநிலங்கள் மத்திய அரசிடம் கையேந்தும் நிலை இருந்தது என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.
தமிழகம், உத்திர பிரதேசம் என பார்க்காமல் இதற்கு முன்பு தமிழகத்திற்கு எத்தனை நிதி வழங்கப்பட்டன, தற்போது எவ்வளவு வழங்கப்படுகிறது என்று பார்த்தாலே தமிழகத்திற்கு மத்திய அரசின் வரி பங்கீடு கணிசமாக உயர்ந்துள்ளது என்பது புரியும்.
வளராத குழந்தையை கைத்தூக்கி விடுவது தான் ஒரு தாயின் பெருந்தன்மை அதையே தான் மத்திய அரசும் செய்து வருகிறது. வளர்ச்சியடையாத மாநிலங்களுக்கு கை தூக்கி விட்டு அவர்களின் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது தான் மத்திய அரசின் நோக்கம். மற்ற மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவது என்று சொல்லுவது ஏற்புடையதல்ல.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பீடு செய்வது என்பது வேற்று நோக்கம் கொண்டவர்களால் மட்டுமே முடியும். இதுவரை மாநில அரசுக்கு நிதி வழங்கப்படாத பல திட்டங்கள் தற்போதைய மத்திய அரசால் மாநில அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
திமுக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திராவாசி யோஜனா திட்டம் சொற்பத்தொகையே மாநில அரசுக்கு வழங்கியது. ஆனால் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் அனைத்து தரப்பட்ட வீடுகளுக்கும் மத்திய அரசு மானியம் அழுகி வருகிறது.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் குடிசை மாற்று வாரிய திட்டங்களுக்கு ரூபாய் 1.5 லட்சம் மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது. இதே போல் 11 மாவட்டங்களில் கொண்டுவரப்பட்ட மருத்துவ மனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு 60% பங்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
மத்திய அரசு குறைவாக நிதி வழங்கிய வருகிறது என குறை கூறுபவர்கள் தமிழக அரசு செயல்படுத்திவரும் திட்டங்களில் மத்திய அரசு பங்கு என்ன என்று தமிழக அரசை கேட்டால் புரியும்.
தமிழக அரசுக்கு மத்திய அரசின் நிதி பங்கீடு எவ்வாறு கிடைக்கிறது எத்தனை கிடைக்கிறது என்ற உண்மை தெரியும். மத்திய அரசு வழங்கும் நிதியை கொண்டு செயல்படுத்திவரும் திட்டங்கள் என்னென்ன என்பதை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.