இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 420 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால், கேரளாவில் இரண்டு பேரும், இராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவரும் என மொத்தம் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 33 ஆயிரத்து 332 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4 கோடியே 44 இலட்சத்து 71 ஆயிரத்து 212 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் ஜே.என்.1 எனப்படும் புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 21-ஆம் தேதி வரை, புதிய வகை கொரோனா பாதிப்பால், கோவாவில் 21 பேரும், கேரளாவில் ஒருவரும் என மொத்தம் 22 பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 220 கோடியே 67 இலட்சம் டோஸ் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.