திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பெயரில் அரசு கஜானாவில் கைவரிசை காட்டும் நோக்கத்தில் அரசியலில் ஈடுபட்டு வருகிறது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
*”மாநிலத் துணைத் தலைவர் வி.பி துரைசாமி தென் சென்னை மாவட்ட தலைவர் காளிதாஸ் உட்பட நூற்றுக்கணக்கான பாரதிய ஜனதா கட்சியினர் சென்னை சைதாப்பேட்டையில் கைது”*
* தமிழகம் முழுமையும் பாரதிய ஜனதா கட்சியினர் ஆயிரக்கணக்கில் கைது*
*சுதந்திரப் போராட்ட காலத்தில் ஜின்னா அவர்கள் பாகிஸ்தான் பகுதியை தனி நாடாக பிரித்து கேட்டபோது, ஜின்னா அவர்களை ஆதரித்தவர்கள் தமிழகத்தில் திராவிட கழகத்தவர்கள்!
அவர்கள் அப்போது நீதி கட்சி என்னும் நில உடமையாளர் சங்கத்தை ஆதிக்க ஜாதியினரின் சங்கமாக நடத்தி வந்தார்கள்! ஜின்னா அவர்களிடம் சென்று நாங்கள் உங்களின் பிரிவினை கொள்கையை ஆதரிக்கிறோம்! நீங்களும் எங்களின் திராவிட நாடு பிரிவினை கொள்கையை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டார்கள்!
“அடைந்தால் திராவிட நாடு இல்லை என்றாலும் சுடுகாடு” என்னும் கொள்கையை திமுக என பெயரை மாற்றிய பிறகும் அந்த ஆதித்த ஜாதியினர் வைத்திருந்தார்கள்!
1962ல் பிரிவினை கோருவது குற்றம் என்று மத்திய அரசு சட்டம் பிறப்பித்த பிறகு கோழைகளாக, சட்டத்தை எதிர்க்காமல், பிரிவினை கொள்கையை கைவிட்ட கோழைகள் திமுகவினர்!
13-12-2023 நாடாளுமன்றத்தில் தேசப்பிரிவினையிலும் தேச பின்னடைவிலும் நாட்டமுடைய ஒரு கும்பல் நாடாளுமன்றத்தில் அத்துமீறல் நடத்தியது!
அப்படி அத்துமீறல் நடத்தியவர்களோடு நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள எந்த கட்சிக்கு ஈடுபாடு இருக்கிறது? என கண்டறியும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது! அந்த விசாரணையில் முடிவு வருவதற்குள் உண்மை வெளிப்பட்டுவிடுமோ? என பதட்டமடைந்த காங்கிரஸ், திமுக கட்சியினர் நாடாளுமன்றத்தில் குழப்பம் செய்தார்கள்!
நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுத்தார்கள்! எம்பிக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற மையப்பகுதியில் வந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்! எனவே சபை விதிகளை மீறிய எம்பிக்கள் சபையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்கள்! அப்படி தற்காலிகமாக நீக்கப்பட்ட எம்பிக்கள் எல்லோரும் சபைக்கு வெளியே ஒன்று கூடி, துணை ஜனாதிபதியை கேவலப்படுத்தி மிமிக்கிரி செய்து வேடிக்கை காட்டி படம் பிடித்து மகிழ்ந்தார்கள்!
தமிழிலே வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்கின்ற சினிமாவில் குறும்புக்கார இளைஞர்கள் அடிக்கின்ற கூத்துக்களை போல, பொறுப்புடன் நடந்துக்கொள்ளவேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூத்தடித்தார்கள்!
நாடாளுமன்ற சபாநாயகராக செயல்படும் துணை ஜனாதிபதியை கேவலப்படுத்தினார்கள்!
இந்த சிறுமைத்தனமான செயலை கண்டிக்கும் வகையில் நாடு முழுமையும் பாரதிய ஜனதா கட்சி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திட முடிவு செய்தது! தமிழகத்திலே 21-12-2023 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திட முன்வந்த பாரதிய ஜனதா கட்சியினரை ஆர்ப்பாட்டம் நடத்த விடாமல் தடுத்து, ஜனநாயகத்தின் குரல்வலையை நெரித்தார்கள்!
தமிழகம் முழுமையும் ஆயிரக்கணக்கான பாரதிய ஜனதா கட்சியினரை கைது செய்து ஆங்காங்கே மண்டபங்களில் அடைத்தது திமுக அரசு!
தென் சென்னை மாவட்டத்தில் மாவட்ட தலைவர் காளிதாஸ் அவர்கள் தலைமையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகையின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு மேற்கொள்ளப்பட்டது! பாரதிய ஜனதா கட்சியை பார்த்து, பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசு இந்த ஆர்ப்பாட்டத்தையும் நடத்திட அனுமதிக்காமல், அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நூற்றுக்கணக்கான தென் சென்னை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினரை அடைத்து வைத்தார்கள்! ஜனநாயக விரோதமான இந்த கொடுஞ்செயலை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவரும் முன்னாள் சட்டமன்ற துணை சபாநாயகருமான வி.பி. துரைசாமி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கண்டனத்தை எடுத்துரைத்தார்கள்!
ஜின்னா அவர்கள் பிரிவினை கோரிய காலம் முதல் தேசத்தின் எதிரிகளாக விளங்கும் ஒரு கூட்டம் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பெயரில் அரசு கஜானாவில் கைவரிசை காட்டும் நோக்கத்தில் அரசியலில் ஈடுபட்டு வருகிறது!
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரின் தகுதியில் சற்றும் குறையாமல் நாடாளுமன்றத்தில் கேவலமாக நடந்து கொண்ட எம்பிக்கள் மத்தியில் அதிக ஆர்வத்தோடு கலந்து கொண்டது திமுக எம்பிக்களே!
13-12-2023 அன்று நாடாளுமன்றத்தில் அத்துமீறியவர்களுக்கும் இந்த திமுகவினருக்கும் சம்பந்தம் இருக்குமா? என்னும் சந்தேகம் இப்போது வலுப் பெற்றுள்ளது 5 டிஜிபிகளை கொண்ட ஒரு குழுவை அமைத்து மத்திய அரசு அத்துமீறியவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு வருகிறது! விசாரணை மேற்கொள்ளும் குழுவினர் 20 தினங்கள் அனுமதி கோரியுள்ளனர்! ஜனவரி முதல் வாரத்தில் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்யக்கூடும்! ‘வரக்கூடிய அறிக்கையில் தங்களின் சாயம் வெளுத்து விடுமோ’- என்னும் பதட்டத்தில் திமுகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் உள்ளன!
திமுகவினர் நாடாளுமன்றத்தில் செய்து வரும் தேச விரோத நடவடிக்கைகளை தோல் உரித்து காட்டக்கூடிய வகையிலே தமிழகம் முழுமையும் அனைத்து மாவட்டங்களிலும் பாரதிய ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் தடுத்து தங்களின் சதி செயலை மேலும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது திமுக அரசு!
13-12-2023 தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் காங்கிரஸ்காரர் என்பதும், விவசாய இடைத்தரகர்களுக்கு ஆதரவாக டெல்லியில் நடத்தப்பட்ட போராட்டத்தில் தீவிரமாக கலந்து கொண்டவர் தான் இந்த காங்கிரஸ் காரர் என்பதும் இன்னொருவர் DYFI என சொல்லக்கூடிய கம்யூனிச தீவிரவாதி எனவும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக சொல்லப்படுகிறது!
இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் இருக்கிறது என ஒரு பொய்யை ராகுல் அடிக்கடி சொல்லி வருகிறார்! அதே பொய்யை தான் நாடாளுமன்றத்தில் அத்துமீறியவர்களும் சொல்லியிருக்கிறார்கள்! இவர்கள் சொல்லி கொடுத்ததை அவர்கள் விசாரணை அமைப்பிடம் சொல்லுகிறார்களா? என்னும் சந்தேகம் எழுந்துள்ளது இந்தியாவில் இப்பொழுது வேலைக்கு ஆள் இல்லாத திண்டாட்டம் தான் இருக்கிறது! வேலை இல்லா திண்டாட்டம் இல்லை!
புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டதால் காங்கிரஸ் கட்சிக்கு வருடா வருடம் அரசு கஜானாவிலிருந்து வந்து கொண்டிருந்த வாடகை தொகை ஆயிரம் கோடி இப்போது வரவில்லை! மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் அமோகமான வெற்றி காரணமாக காங்கிரஸ் கட்சியும் திமுகவும் தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது என்னும் நிலை உறுதி ஆகிவிட்டது!
‘அரசியல் பிழைப்பு’ அற்றுப் போய்விட்ட காரணத்தினாலேயே காங்கிரஸ்காரர்களும் திமுகவினரும் மற்ற சில எதிர்க்கட்சியினரும் நாடாளுமன்றத்தை கூத்தாடும் மன்றமாக மாற்றுகிறார்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் கைவரிசையை நாடாளுமன்றத்தில் காட்டுகிறார்கள்!
2024 வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த தேசவிரோதிகளை வாக்காள பெருமக்கள் தூக்கி எறிவார்கள்! எனத் தெரிவித்துள்ளார்.