அமெரிக்காவில் இந்து கோவில் அவமதிப்பு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலிபோர்னியா மாகாணத்தின் நெவார்க் நகரில் ஸ்வாமிநாராயண் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சுவர்களில் இந்தியாவுக்கு எதிராகவும், காலிஸ்தானுக்கும் ஆதரவாகவும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதுகுறித்து அந்த கோவில் நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக கோவில் செய்தித்தொடர்பாளர் பார்கவ் ராவல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கோவிலுக்கு அருகில் வசிக்கும் பக்தர்களில் ஒருவர், சுவரில் கருப்பு மையில் இந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதாக கூறினார். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதாகவும், அவர்கள் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.