இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்னும் ஒரு வாரத்தில் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணம் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்துவதையும் பாதுகாப்புத் துறையில் மூலோபாய கூட்டாண்மைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் ராஜ்நாத் சிங் இங்கிலாந்துக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்த பயணத்தின் போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரிட்டிஷ் பிரதிநிதியான இங்கிலாந்து பாதுகாப்புச் செயலர் உடன் கலந்துரையாடுகிறார். இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஈடுபாட்டை வலுப்படுத்த குறிப்பிட்ட முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.