தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் திரைப்படங்களில் நடிக்க நடிகை சாய் பல்லவி மறுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்கள் தான் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்களின் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் யாரேனும் நடித்தால் கூட அவர்கள் பெரிய அளவில் பேசப்படுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இவர்களின் படத்தில் நடிக்க கதாநாயகிகள் ஆர்வமாக உள்ளதாக பலரும் ஓப்பனாக கூறியிருக்கின்றனர். இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வளம் வரும் சாய் பல்லவி அஜித் மற்றும் விஜய் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ள தகவல் வந்துள்ளது.
இந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் துணிவு. இதன் படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் சாய் பல்லவி தான் தேர்வாகினார் என்றும் படத்தின் கதையை இயக்குனர் எச்.வினோத் கூறியபோது, இவரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் இல்லாதது போல் தோன்றியதால் இந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் துணிவு படத்தை நிராகரித்த சாய் பல்லவிக்கு, விஜய்யின் ‘லியோ’ படத்தில் திரிஷா நடித்த சத்யா கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தேடி சென்றது.
கோடிகளில் சம்பளம் பேசப்பட்ட போதும், ஒரு சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க முடியாது என சாய் பல்லவி கூறியதாக தெரிகிறது. அதன் பின்னரே இந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு சென்றுள்ளது.
தன்னுடைய கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கும் விதமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் சாய் பல்லவி, தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே 21’ படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிபிடித்தக்கது.