கிரிக்கெட்டிற்கு பிறகு அதிக நேரம் இராணுவத்தில் செலவிட விரும்புகிறேன் என்று கிரிக்கெட் வீரர் தோனி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் என்று சொன்னாலே அனைவர்க்கும் நினைவில் வரும் பெயர் மகேந்திர சிங் தோனி. கிரிக்கெட் வீரராக மட்டும் இல்லாமல் நல்ல மனிதராகவும் நம் அனைவரின் மனதில் இடம் பிடித்தவர் தான் இவர்.
இந்திய கிரிக்கெட் கேப்டனாக இருந்த தோனி ஐசிசி கோப்பைகளை இந்தியாவிற்காக வாங்கி கொடுத்து ரசிகர்களை மகிழவைத்துள்ளார். அனைவரையும் மகிழவைத்த இவர் 2019 ஆம் ஆண்டு கண்ணீருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகினார்.
இது ரசிகர்களுக்கு சோகத்தை அளித்தாலும், அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்ற ஆறுதல் இருந்தது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுடன் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விளையாடமாட்டார் என்ற தகவலும் பரவி வருகிறது.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் தோனியிடம் நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்துள்ள தோனி நான் ஓய்வுக்கு பிறகு என்ன செய்யப் போகிறேன் என்று இதுவரை நான் யோசிக்கவில்லை. ஏனென்றால் நான் இன்னும் கிரிக்கெட் தான் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.
ஐபிஎல் தொடரில் நான் இன்னும் இருக்கிறேன். ஆனால் கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெற்ற பிறகு நான் என்ன செய்யப் போகிறேன் என்பது குறித்து யோசிக்க எனக்கு ஆர்வமாக இருக்கிறது. ஆனால் நிச்சயமாக ஒரு விஷயத்தை கண்டிப்பாக செய்வேன்.
இந்திய இராணுவத்துடன் இணைந்து கூடுதல் நேரத்தை செலவிடுவேன். ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக என்னால் இராணுவத்தில் சென்று பணியாற்ற முடியவில்லை என்று எம்.எஸ்.தோனி வருத்தத்துடன் கூறினார்.