கடந்த சில தினங்களுக்கு முன்னர், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டிப்போட்டது அதித கனமழை. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், பலர் வீடுகளை இழந்தனர். வீடுகளுக்குள் இருந்து உடை, உடைமைகள், மற்றும் பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்களின் பாடபுத்தங்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்தன.
இதனால், கனமழை பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்பால் இழந்த சான்றிதழ்களை பெற http://mycertificates.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில், கனமழை பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மாணவ, மாணவிகள் கட்டணமின்றி சான்றிதழ் நகல்களை பெறலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஏற்கனவே, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்பால் இழந்த சான்றிதழ்களை பெற http://mycertificates.com என்ற இணையதளத்தில், தென்மாவட்ட கல்லூரி மாணவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து நகல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.