கெம்பேகெளடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையம், சிறந்த உள்புற வடிவமைப்புக்கான உலகளாவிய சிறப்புப் பரிசை வென்றதற்காக பெங்களூரு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினலை கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விமான நிலையம் ரூ. 5000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
கெம்பேகெளடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையம், விமான நிலையங்கள் பிரிவில் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த உள்புற வடிவமைப்புக்கான உலகளாவிய சிறப்புப் பரிசை வென்றுள்ளதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூரு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்த முனையக் கட்டடத்தின் திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட படங்களையும் தனது எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
A commendable feat! Congratulations to the people of Bengaluru.
Terminal 2 of the Kempegowda International Airport is not just a gateway to the vibrant city of Bengaluru but also a showcase of architectural brilliance. This accomplishment reflects the country's growing prowess… https://t.co/VorlL5StHf pic.twitter.com/v6zqpJpLMa
— Narendra Modi (@narendramodi) December 23, 2023
“பாராட்டத்தக்க சாதனை! பெங்களூரு மக்களுக்கு வாழ்த்துகள்!.
கெம்பேகெளடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் துடிப்பான பெங்களூரு நகரத்தின் நுழைவாயிலாக மட்டுமல்லாமல், கட்டடக்கலை படைப்பாற்றலின் வெளிப்பாடாகவும் உள்ளது.
உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை கலை அழகுடன் இணைப்பதில் நாட்டின் வளர்ந்து வரும் திறனை இந்தச் சாதனை பிரதிபலிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.