ஜுவாரி பாலம் இன்று முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததை முன்னிட்டு கோவா மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தப் பாலம் இணைப்பை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலா மற்றும் வர்த்தகம் முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
Congratulations to the people of Goa on the Zuari Bridge being fully operational! This key project will improve connectivity between northern and southern Goa thus boosting tourism and commerce in the times to come. https://t.co/0cWhe4g0jh
— Narendra Modi (@narendramodi) December 23, 2023
“ஜுவாரி பாலம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததற்காக கோவா மக்களுக்கு வாழ்த்துக்கள். இந்த முக்கியத் திட்டம் வடக்கு மற்றும் தெற்கு கோவா இடையேயான இணைப்பை மேம்படுத்தும், இதனால் வரும் காலங்களில் சுற்றுலா மற்றும் வர்த்தகம் அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.