கோவையில் திமுக நிர்வாகி பைந்தமிழ் பாரி வீட்டில், கர்நாடக லோக் ஆயுக்தா, சோதனை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் அவரை கைது பண்ணிருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் எடுப்பார்கள் என நம்பவில்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசியவர்,
சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் வெள்ளம், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதைவிட அதை கையாண்ட விதம் மிகவும் மோசமாக பார்க்கப்படுகிறது. பேசப்படுகிறது. மத்திய ஆய்வு குழு வந்த பின்னரே தமிழக முதலமைச்சர் அங்கு செல்கிறார். நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தாமல், மத்திய அமைச்சரை வம்புக்கு இழுக்கிறார். உதயநிதி திமுக கட்சியை மூட்டை கட்டி கடலில் போடப் போகிறார்.
தென் தமிழக பாதிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் பேசியுள்ளேன். சேதம் பாதிப்பு கணக்கீடு செய்ய அவர் வருகிறார். தற்போது, முழு பொறுப்பை மத்திய அரசு எடுக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
திமுக அடுத்த பொய், வானிலை மையத்தின் மீது பழி போடுகிறது. ரெட் அலர்ட் கொடுக்கும் போது கவனம் முழுவதும் திமுக மாநாடு, இண்டியா கூட்டணியில் இருந்தது. திருநெல்வேலி மேயர் சேலத்தில் இருந்தார். பொய் சொல்வது திமுகவுக்கு ஒரு கலை.
சிறந்த பொருளாதார மாநிலமாக உத்திரபிரதேசம் உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டை முந்திவிட்டது. தமிழகத்திற்கு முதன் முதலாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் பணத்தை திமுகவினர் திருடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை ஏழை என்கிற சாதியே இருக்கக் கூடாது. அதுதான் பாஜகவின் நோக்கம்.
உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை பற்றி தப்பா பேசவில்லை என்றார். அதனுடைய வெளிப்பாடுதான், நிதிஷ்குமார் ஹிந்தி பாடம் எடுத்து இரண்டு பேருக்கும் பாடம் நடத்தி வெளியில் அனுப்பி உள்ளார்.
கோவையில் திமுக நிர்வாகி பைந்தமிழ் பாரி வீட்டில், கர்நாடக லோக் ஆயுக்தா, சோதனை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் அவரை கைது பண்ணிருக்க வேண்டும், ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் எடுப்பார்கள் என நம்பவில்லை என்றார்.