மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க ரூ.5,228 மானியம்!
Nov 15, 2025, 05:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க ரூ.5,228 மானியம்!

Web Desk by Web Desk
Dec 24, 2023, 02:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, இந்த ஆண்டு 11.53 லட்சம் மின்சார வாகனங்களுக்கு மத்திய அரசு 5,228 கோடி ரூபாய் மானியம் வழங்கி இருப்பதாக மத்திய கனரக தொழில்கள் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் மின்சார வாகனத்தின் உற்பத்தியைப் பெறுக்கவும், பயன்பாட்டை ஊக்குவிக்கவும் ஃபேம் திட்டத்தின் 2-வது கட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. போக்குவரத்தில் மின்சார தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், புதைபடிம எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, மின்சாரப் பேருந்துகள், 3 சக்கர மின்சார வாகனங்கள் மற்றும் 4 சக்கர மின்சார வாகனங்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரை, பொதுப் போக்குவரத்து அல்லது வணிகப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இரு சக்கர மின்சார வாகனங்களுக்கும், தனியாருக்குச் சொந்தமான வாகனங்களுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், ஃபேம் திட்டத்தின் 2-வது கட்டத்தின் கீழ் 7,090 மின்சாரப் பேருந்துகள், 5 லட்சம் மூன்று சக்கர மின்சார வாகனங்கள், 55,000 நான்கு சக்கர மின்சார வாகனங்கள் கார்கள், 10 லட்சம் இரு சக்கர மின்சார வாகனங்கள் ஆகியவற்றுக்கு மானியம் வழங்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, மின்சார வாகனங்களுக்கான பாகங்கள் தொடர்பான தொழில்நுட்பங்களை மேம்படுத்த உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 25,938 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதியுதவிகள் வழங்கப்படுகிறது.

இதுதவிர, மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தியை மேம்படுத்த, உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 18,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதேசமயம், இரு சக்கர வாகனங்களுக்கான ஊக்கத்தொகை 2021  ஜூன் 11 முதல் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், மின்சார வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. மின்சார வாகனங்களுக்கு சாலை வரியிலிருந்து விலக்கு அளிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

இதுகுறித்து கனரக தொழில்கள் அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க இதுபோல்  மேலும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த சூழலில், நாடு முழுவதும் 7,432 பொது ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்காக பி.எஸ்.யூ. ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு 800 கோடி ரூபாயை அரசாங்கம் அனுமதித்திருக்கிறது.

தற்போது நாட்டில் மொத்தம் 148 எலெக்ட்ரானிக் வாகனங்கள் பொது சார்ஜிங் நிலையங்கள் செயல்படுவதாக கனரக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் 11.53 லட்சம் மின்சார வாகனங்களுக்கு மத்திய அரசு 5,228 கோடி ரூபாய் மானியம் வழங்கி இருக்கிறது. மேலும், நாட்டில் சுத்தமான மற்றும் பசுமையான பொது போக்குவரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது”என்று தெரிவித்திருக்கிறது.

Tags: Govt givesRs 5228 crore subsidyElectric Vehicles
ShareTweetSendShare
Previous Post

சதுரகிரி கோவிலுக்குச் செல்ல தடை – காரணம் என்ன?

Next Post

மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பு : உயிரிழந்த ஐஐடி பேராசிரியர்!

Related News

அரசியலமைப்பு திருத்தத்துக்கு பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு!

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் டிராவல் இன்புளூயன்சர்!

மகாராஷ்டிரா : காரை கழுதைகளில் பூட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற உரிமையாளர்!

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

விருந்தோம்பலால் இந்தியாவில் குடும்பம் இருப்பது போல உணர்கிறேன் – பிரெஞ்சு பெண்

Load More

அண்மைச் செய்திகள்

கொடைக்கானல் : ஸ்டைலாக போட்டோக்கு போஸ் கொடுத்த பெண்ணை விரட்டிய குரங்கு!

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி – உற்சாக வரவேற்பு!

நெல்லை : கையில் தீப ஜோதியுடன் ஸ்கேட்டிங் செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்!

திருத்தணி : வாகனத்தில் செல்வோர் மீது கற்களை வீசி தாக்கும் வடமாநில இளைஞர்!

திருச்சி : சாட்டை துரைமுருகனை கைது செய்யக் கோரி அமமுக நிர்வாகிகள் போராட்டம்!

தொடர் தோல்விக்கான விருதை ராகுல் காந்தி தவிர வேறு யாரும் வெல்ல முடியாது – அமித் மாள்வியா

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் நாடகமாடுகிறார் – நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

நாமக்கல் கிட்னி முறைகேடு விற்பனை : இடைத்தரகர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies