ராமஜென்ம பூமிக்கு செல்லாத கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என இந்துக்கள் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து, கோவில் கட்டும் பணிகள் தொடங்கியது. ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டி கொண்டு வரப்பட்ட கற்கள் உதவியுடன் கோவில் கட்டப்பட்டு, 2024-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி திறப்பு விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் கோவில் கருவறையில் ராமர் சிலை வைத்து, குடமுழுக்கு விழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த விழாவில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விவிஐபிக்கள், மடாதிபதிகள், சாமியார்கள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து மதம் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. சிறுபான்மை ஓட்டுக்கள் பற்றி மட்டுமே கவலை. ராமஜென்மபூமிக்கு செல்லாத கட்சிகளுகளுகளுக்கு இந்துக்கள் வாக்களிக்க மாட்டோம் என இந்துக்கள் அறிவித்தால் தான் இவர்கள் திருந்துவார்கள் pic.twitter.com/bMueWBN41L
— H Raja (@HRajaBJP) December 24, 2023
இதனிடையே, பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், இந்து மதம் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. சிறுபான்மை ஓட்டுக்கள் பற்றி மட்டுமே கவலை. ராமஜென்மபூமிக்கு செல்லாத கட்சிகளுகளுகளுக்கு இந்துக்கள் வாக்களிக்க மாட்டோம் என இந்துக்கள் அறிவித்தால் தான் இவர்கள் திருந்துவார்கள் என தெரிவித்துள்ளார்.