மிக்ஜாம் புயல் காரணமாக வசூல் ரீதியாகச் சரிவைச் சந்தித்த நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது, இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ‘அன்னபூரணி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வந்தது.
இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறவில்லை. ஏனெனில் இப்படம் வெளியான 2 நாட்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் ஏற்பட்டு மின்சாரங்கள் பாதிக்கப்பட்டது.
மக்களால் திரையரங்குகளுக்குச் செல்லமுடியாமல் போனதன் காரணமாக இப்படம் வசூல் ரீதியாகச் சரிவைக் கண்டது. இந்நிலையில் தற்போது இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
அதன்படி இப்படம் வருகின்ற டிசம்பர் 29 ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.