கடந்த 1996 முதல் 2001 -ம் ஆண்டு திமுக ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்ற நீதிபதி போதிய ஆதாரம் இல்லை என பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்தார்.
வேலூர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்வதாக கூறி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டதால், அந்த வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். இதில்தான், பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.
இதேபோல, திமுக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதி உள்ளிட்டவர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கை மறுஆய்வுக்கு எடுத்துள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷிக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.
இதனால், வரும் 2024-ம் ஆம்டு ஜனவரி மாதம் முதல் திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர்ஆர் ராமச்சந்திரன், பொன்முடி உள்ளிட்டவர்களின் மீதான வழக்களை தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.