அயோத்தி இராமர் கோவில் கட்டுமானப்பணி குறித்த தற்போதைய புகைப்படங்களை ராமஜென்ம பூமி அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.
ராமர் பிறந்த இடமான அயோத்தி ராம ஜென்ம பூமியில், பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் பூமி பூஜை 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, கட்டுமானப்பணிகளை துவக்கி வைத்தார்.
2.7 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.1800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதில் 57,400 சதுரஅடியில் கோவில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரமும் கொண்டதாக இக்கோவில் அமைக்கப்பட்டு வருகிறது.
மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோவிலில் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2வது தளத்தில் 74 அறைகளும் உள்ளன.
இந்த கோவிலுக்கு மொத்தம் 12 நுழைவு வாயில்கள் உள்ளன. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இராமர் கோவில் கட்டுமானப் பணி குறித்த புகைப்படங்களை ராமஜென் பூமி அறக்கட்டளை இன்று வெளியிட்டுள்ளது.