வாட்சபை போலவே நண்பர்களுக்கு லைவ் லொகேஷனை அனுப்பும் அம்சத்தை இன்ஸ்டாகிராமில் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகமே நவீன மயமாகி வரும் இன்றைய காலகட்டத்தில் அனைவரின் கையிலும் உலகமே உள்ளது. ஆம், நாம் வைத்திருக்கும் ஸ்மார்ட் போனை வைத்தே உலகையே காண முடிகிறது.
அந்த ஸ்மார்ட் போனில் பெறும் பங்கு வகிப்பது என்றால் அதில் உள்ள செயலி என்றே சொல்லலாம். அதில் இன்றைய இளைஞர்கள் அதிகம் விரும்பும் செயலி சென்றால் அது இன்ஸ்டகிராம் என்றே சொல்லலாம்.
அந்த அளவில் இன்ஸ்டாகிராம் இளைஞர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறைய பயனர்களை கொண்டுள்ள இன்ஸ்டாகிராம் தங்களின் பயனர்களின் வசதிக்காக அடிக்கடி புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த தற்போது வாட்ஸ் ஆப்பை போலவே இன்ஸ்டாகிராமில் தங்களின் இடத்தை பகிரும் அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது நம் நண்பர்களுடன் உரையாடும் சாட்டில் இருக்கும் பிளஸை தொட்டால் அதில் காட்டும் லொகேஷனை கிளிக் செய்து நண்பர்களுக்கு அனுப்பும் புதிய வசதி வந்துள்ளது.