ப்ரோ கபடி : கடைசி நிமிடத்தில் வெற்றி பெற்ற யு மும்பா!
Nov 5, 2025, 02:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ப்ரோ கபடி : கடைசி நிமிடத்தில் வெற்றி பெற்ற யு மும்பா!

Web Desk by Web Desk
Dec 25, 2023, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் யு மும்பா அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.

பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளனர்.

இதில் நேற்று நடைபெற்ற 38வது போட்டியில் யு மும்பா – பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதல் ஐந்து நிமிடத்தில் முடிவில் யு மும்பா அணி 5 – 3 புள்ளிகளை கொண்டு முன்னிலை வகித்தது.

யு மும்பா அணி முதல் பாதியில் 18 – 15 என்ற புள்ளிகளை கொண்டு முன்னிலை பெற்றது. பெங்கால் அணியின் நட்சத்திர ரைடர் மணிந்தர் தனி ஆளாக தன் அணியைக் காப்பாற்ற போராடிக் கொண்டு இருந்தார்.

பெங்கால் அணி வீரர்கள் தடுப்பாட்டத்தில் கோட்டை விட்டதால் களத்தில் வீரர்கள் இல்லாமல், ரைடர் மணிந்தர் தடுப்பாட்டமும் ஆட வேண்டிய நிலையில் இருந்தார்.

எனினும், போராடி இரண்டாம் பாதியில் 10 நிமிடங்கள் முடிந்த போது பெங்கால் அணியை 26 – 28 என இரண்டு புள்ளிகள் முன்னிலை பெற வைத்தார்.

கடைசி 2 நிமிடங்கள் இருந்த போது யு மும்பா அணி 38 – 33 என முன்னிலை பெற்று போட்டியை மாற்றியது. அப்போது பெங்கால் அணி 4 புள்ளிகளை பெற்றதால் பரபரப்பு எழுந்தது. ஆனால், ஆட்ட நேர முடிவில் யு மும்பா அணி 39 – 37 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

Tags: kabadi gamepro kabadi
ShareTweetSendShare
Previous Post

கலாசார பிணைப்புகளுக்கு புத்துயிர் அளிக்கும் காசி! – தமிழக ஆளுநர் புகழாரம்!

Next Post

சபரிமலை : பெருவழிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கும் நேரம் அதிகரிப்பு!

Related News

ஏமாற்றும் திமுக மாடலுக்குத் தமிழக மகளிர் ஏமாற்றத்தையே பரிசளிப்பர் – நயினார் நாகேந்திரன்

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்தியா – இந்தோனேஷியா பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம்!

பொற்கோயிலில் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் வழிபாடு!

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தபோது தொண்டர்களின் கருத்து கேட்கப்படவில்லை – மனோஜ் பாண்டியன்

நிலவு இன்று வழக்கத்தை விட 30 சதவீதம் பெரிதாகத் தென்படும் – நாசா

அதிகப்படியான வாகனங்களை நிறுத்தியதால் தீயணைப்பு வாகனம் செல்வதில் தாமதம்!

Load More

அண்மைச் செய்திகள்

வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு!

கர்நாடகா : இளம் தொழில்முனைவோர்களாக மாறிய 10 வயதுடைய 3 சிறார்கள்!

குருநானக் தேவ் பிறந்த நாள் விழா – குருநானக் சத் சங் சபாவில் தமிழக ஆளுநர் வழிபாடு!

சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா தொடக்கம்!

அசிம் முனீரின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான் அரசு!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் திருக்கல்யாண விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

ஐப்பசி மாத பௌர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies