கலாசார பிணைப்புகளுக்கு புத்துயிர் அளிக்கும் இடம் காசி என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து தமிழ்நாடு மற்றும் காசியின் பழமையான கலாசார தொடர்பைக் கொண்டாடினோம்.
தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து #தமிழ்நாடு மற்றும் #காசியின் பழமையான கலாசார தொடர்பைக் கொண்டாடினோம். பாரதத்தின் ஆன்மிக தலைநகரான காசியுடன் தமிழ் மக்களின் தீவிர உணர்ச்சிமயமான பிணைப்பை உணர்ந்தது மனதுக்கு இதமான அனுபவமாக இருந்தது. பாரதத்தின்… pic.twitter.com/la3TPCzQAb
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 24, 2023
பாரதத்தின் ஆன்மிக தலைநகரான காசியுடன் தமிழ் மக்களின் தீவிர உணர்ச்சிமயமான பிணைப்பை உணர்ந்தது மனதுக்கு இதமான அனுபவமாக இருந்தது. பாரதத்தின் வலிமைமிக்க முக்கிய பலமான நமது மக்களின் கலாசார பிணைப்புகளுக்கு புத்துயிர் அளிக்கும் தொலைநோக்குப்பார்வை மற்றும் ஆற்றல்மிக்க தலைமைத்துவத்தை கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி.- ஆளுநர் ரவி என பதிவிட்டுள்ளார்.