பிரான்சில் சிறைபிடிக்கப்பட்ட விமானம்: 303 இந்தியர்களுடன் விமானம் புறப்பட அனுமதி!
Sep 12, 2026, 05:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரான்சில் சிறைபிடிக்கப்பட்ட விமானம்: 303 இந்தியர்களுடன் விமானம் புறப்பட அனுமதி!

Murugesan M by Murugesan M
Dec 25, 2023, 11:50 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

துபாயிலிருந்து 303 இந்தியப் பயணிகளுடன் தென் அமெரிக்க நாடான நிகராகுவாவுக்கு சென்று கொண்டிருந்த விமானம் கடந்த வியாழக்கிழமை பிரான்ஸ் நாட்டின் வெட்ரி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. மனித ஆள் கடத்தல் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், விமானம் புறப்பட பிரான்ஸ் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

துபாயிலிருந்து 303 இந்தியப் பயணிகளுடன், மத்திய அமெரிக்காவில் உள்ள நிகராகுவ நாட்டிற்கு ஏர்பஸ் ஏ340 பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் நிகராகுவ நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு சென்று கொண்டிருந்தது.

பிரான்ஸ் எல்லைப்பகுதியில் பறந்தபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறக்க அனுமதி கிடைத்ததும், கிழக்கு பிரான்சில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் வந்த பயணிகளிடம் பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விமானத்தில் மனித கடத்தல் நடந்திருக்கலாம் என்று பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

இதனால் பிரான்ஸ் அதிகாரிகள் உடனடியாக விமானத்தை மீண்டும் பறக்க விடாமல் தடுத்து, இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து பிரான்ஸ் அதிகாரிகள் இந்திய தூதரகத்திற்குத் தகவல் கொடுத்தனர். இந்தியத் தூதரக அதிகாரிகள் அங்கு சென்று இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை செய்தனர்.

இது தொடர்பாக பிரான்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் விமானத்தில் பயணித்த அனைவரும் உரிய அனுமதியுடன் பயணித்ததும், மனித கடத்தலில் ஈடுபடவில்லை என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விமானம் மீண்டும் புறப்பட அனுமதி வழங்கி நேற்று பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 303 இந்தியர்களுடன் விமானம் இன்று பிரான்சில் இருந்து நிக்கராகுவா நாட்டிற்கு புறப்படுகிறது.

Tags: FrenchFlight allowed to take off with 303 Indians!
Share
Tweet
SendShare
Previous Post

பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட்!

Next Post

கலாசார பிணைப்புகளுக்கு புத்துயிர் அளிக்கும் காசி! – தமிழக ஆளுநர் புகழாரம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies